15 Jan 2013

Sony New Technology

இனி குளிக்கும்போதும் ஃபோன் பேசலாம்: சோனி புதிய மாடல் அறிமுகம்(காணொளி)



நீரில் மூழ்கினாலும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய வகை ஸ்மார்ட்போனை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
எக்ஸ்பீரியா இசட் (XPeria Z) என்று பெயிரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை, நீச்சல் குளத்திலும், குளியலறையிலும் பயன்படுத்த முடியும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. நீருக்குள் 30 நிமிடங்கள் வரை இருந்தாலும் இந்த போனுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் இன்று தொடங்கிய சர்வதேச மின்னணு சாதன கண்காட்சியில் இந்த ஸ்மார்ட்போனை சோனி அறிமுகப்படுத்தியது. நீரால் பாதிக்கப்படாத செல்போன்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ஏற்கெனவே பல போன்களில் இருந்தாலும், உயர்தர ஸ்மார்ட்போன்களில் அதைப் பயன்படுத்துவது மிக அரிதாகும். 5 அங்குல திரை கொண்ட இந்த ஃபோன் மூலம் எச்.டி.,(HD) திரைப்படங்களை பார்க்க முடியும். 4ஜி வசதி, 13 மெகா பிக்சல் துல்லியத் தன்மை கொண்ட கேமரா உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.
 
 
வரும் வெள்ளிக்கிழமை வரை நடக்க இருக்கும் சர்வதேச மின்னணு சாதனக் கண்காட்சியில் 150 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன