30 Mar 2012

சென்ட்ரல் ஜெயிலில் 'நண்பன்'!


சென்ட்ரல் ஜெயிலில் 'நண்பன்'!


சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து ஹிட்டான 'நண்பன்' திரைப்படம் சேலம் சென்ட்ரல் ஜெயிலில் உள்ள கைதிகளுக்காக ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்ட்து. இதன் மூலம் கைதிகளை மனிதாபிமானத்துடன் திருத்தும் வகையில் 'சேலம் சென்ட்ரல் ஜெயில்' ஒரு முன்னுதாரணமாக செயல்படுகிறது என தெரிகின்றது. இத்திரைப்படம் கைதிகளை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தது. மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளின் முலம் கைதிகள் தங்கள் ஜெயில் வாழ்க்கையின் துயரத்தை மறந்து சிறிது நேரம் சந்தோஷமாக இருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறந்த படங்களை தேர்வு செய்து திரையிடுவதன் மூலம், கைதிகளை நல்வழிப்படுத்தவும் முடியும். மொத்தத்தில் 'நண்பன்' திரைப்படம் சேலம் சென்ட்ரல் ஜெயில் கைதிகளுக்கு ஒரு விருந்தாக அமைந்ததோடு, அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு முன்னுதாரணமாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஷங்கர், ஹிந்தியில் ஹிட்டான '3 இடியட்ஸ்' படத்தினை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் முன்ன்னணி நட்சத்திரங்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் சத்யராஜ் நடித்திருந்தனர். நண்பனால் சிறைக்குள் பூத்தது நம்பிக்கை பூ....!

No comments: